Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் எம்.பிக்களை நேரில் சந்தித்த இந்தியத் தூதுவர்!

யாழில் எம்.பிக்களை நேரில் சந்தித்த இந்தியத் தூதுவர்!

0 minutes read

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

நேற்று (16) இரவு 7:30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மேற்படி சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், ந.ஸ்ரீகாந்தா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More