செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்ற போராட்டம்!

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்ற போராட்டம்!

0 minutes read

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்று கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்கத் தீர்மானித்துள்ளனர்.

விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாகக் கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் தொடர்பாக நேற்று விஞ்ஞான பீட பீடாதிபதி மற்றும் துறைத் தலைவர்களுக்கு, விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினரால் எச்சரிக்கைக் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில் இன்று நண்பகலுக்குள் சாதகமான முடிவு கிடைக்காது விட்டால் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.