Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக வீழ்ச்சி!

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக வீழ்ச்சி!

1 minutes read

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம், கடந்த பெப்ரவரி மாதம் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்த பணவீக்கம், மார்ச் மாதம் 0.9 சதவீதமாக சடுதியாக பெருமளவால் வீழ்ச்சியடைந்தது.

அதன்படி, கடந்த பெப்ரவரி மாதத்தில் 7.0 சதவீதமாக பதிவான உணவல்லாப் பணவீக்கம் மார்ச்சில் 0.5 சதவீதம் எனும் குறிப்பிடத்தக்க அளவிலான சுருக்கத்தைப் பதிவு செய்ததுடன், பெப்ரவரியில் 3.5 சதவீதமாக பதிவான உணவுப்பணவீக்கம் மார்ச்சில் 3.8 சதவீதமாக அதிகரித்தது.

மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் மார்ச்சில்-1.94 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதற்கு உணவுப்பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட 0.66 சதவீத வீழ்ச்சியும், உணவல்லாப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட 1.28 சதவீத வீழ்ச்சியும் காரணமாக அமைந்துள்ளன.

அதேவேளை பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தை பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த பெப்ரவரி மாதத்தில் பதிவான 2.8 சதவீதத்திலிருந்து மார்ச்சில் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணை அளிக்கப்பட்டு, பணவீக்கமானது எதிர்வரும் காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடைந்து, நடுத்தர காலத்தில் அம்மட்டத்துக்கு மேல் இருக்குமென மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More