Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு

0 minutes read

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்  செயலாளராக செயற்பட்ட ந. நல்லநாதர் மறைவின் பின்னர் வெற்றிடமாக காணப்பட்ட  பதவிக்கு நா.ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை வவுனியா கோயில் புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இதன்போதே கூட்டணியின் செயலாளர் பதவிக்கான தெரிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் பதவி எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு புளொட் அமைப்புக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம், மறைந்த மூத்த தலைவர் நல்லநாதர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அண்மையில் காலமானதால், தற்போது அவரது பதவிக்கு புளொட் அமைப்பை சேர்ந்த நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More