செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொன் சிவகுமாரனின் 50வது நினைவேந்தல்

பொன் சிவகுமாரனின் 50வது நினைவேந்தல்

1 minutes read

பொன் சிவகுமாரனின் 50ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று (05) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சங்கத்தின் செயலாளர் தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, அகவணக்கம் செலுத்தியதுடன்  திருவுருவச்சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

‘உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு’ என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரனின் உருவச்சிலை 1975 ஜூன் 05ஆம் திகதி சிறை மீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமியால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய தரப்புக்களாலும் அச்சிலை பல தடவைகள் உடைத்து நொறுக்கப்பட்டு, உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு, புதையுண்டு கிடந்த நிலையில், அச்சிலை மீள எடுத்து, முன்பிருந்த பகுதி வளாகத்திலேயே அமைக்கப்பட்டது.

இந்த சிலையை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் திறந்துவைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.