செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யாழ் விஜயம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யாழ் விஜயம்!

1 minutes read

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) தொடக்கம் வியாழக்கிழமை வரை (13) யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பிரதிச் செயலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்தார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (9) கிளிநொச்சி தொகுதி பிரதம அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன் தலைமையில் கிளிநொச்சி பாரதி வித்தியாலயம், யாழ்ப்பாண தொகுதி பிரதம அமைப்பாளர் வெற்றிவேலு யஜேந்திரன் தலைமையில் வைத்தீஸ்வரா கல்லூரி, நல்லூர் தொகுதி பிரதம அமைப்பாளர் அ. கிருபாகரன் தலைமையில் சென். பெனடிக்ற் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (10) பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தொகுதிகளுக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார். அன்றைய தினம் காங்கேசன்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் தலைமையில் அளவெட்டி அருணோதயா கல்லூரிக்கு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை (11) எதிர்க்கட்சித் தலைவர், ஊர்காவற்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் குருபரன் மதன்ராஜ் தலைமையில் நெடுந்தீவு மகாவித்தியாலம், மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் அனோஜன் அருந்தவநாதன் தமையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, புனித. ஹென்றியரசர் கல்லூரி இளவாலை ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார்.

எதிர்வரும் புதன் (12) கோப்பாய் தொகுதிக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார். தொடர்ந்து வட்டுக்கோட்டை தொகுதி பிரதம அமைப்பாளர் சதாசிவன் தலைமையில் வட்டுக்கோட்டை யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர் பாடசாலைக்கு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார்.

மேலும் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், பஸ் வண்டி ஒன்றை அன்பளிப்பு செய்யவுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை (13) சாவகச்சேரி தொகுதி பிரதம அமைப்பாளர் கந்தையா மயில்வாகனம் தலைமையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி் தொகுதி அமைப்பளர் மொகமட் காசிம் தலைமையில் இரணைதீவு றோ. க. த. க ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார்.

பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன மற்றும் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோருடன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பல சமூக, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது விஜயத்தின்போது, அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.