செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எத்திமலையில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

எத்திமலையில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

0 minutes read

மொனராகலை பிரதேசத்தில் எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வயலொன்றில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி நேற்று (3) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எத்திமலை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயியொருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் மேலும் மூன்று நபர்களுடன் இணைந்து வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கடும் மழை காரணமாக அருகில் இருந்த மரமொன்றிற்கு அடியில் நின்றுகொண்டிருந்த போது மின்னல் தாக்கி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர் எத்திமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.