செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மோட்டார் சைக்கிள் மோதி 91 வயது மூதாட்டி மரணம்!

மோட்டார் சைக்கிள் மோதி 91 வயது மூதாட்டி மரணம்!

0 minutes read

வீதி விபத்தில் 91 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கம்பஹா – கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த ஓட்டோ ஒன்றைக் கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்றபோது எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி பின்னர் வீதியில் பயணித்த மூதாட்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமைடைந்த மூதாட்டி ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More