செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அநுர ஜூன் 10 ஆம் திகதி ஜேர்மனிக்கு விஜயம்!

அநுர ஜூன் 10 ஆம் திகதி ஜேர்மனிக்கு விஜயம்!

0 minutes read

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜூன் 10ஆம் தி்கதி ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“எமது சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைவதற்கு முன்பு, ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டுக்கு வந்தனர். ஆனால், இப்போது அது குறைந்துள்ளது.

ஜேர்மன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் ஈர்ப்பதற்கும், இரு நாடுகளும் இதற்கு என்ன செய்ய முடியும் என்பதையும் பார்க்க வேண்டும்.

பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதையும் இலக்காகக் கொள்ள வேண்டும்,” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.