செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்: துமிந்தவுக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!

தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்: துமிந்தவுக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!

1 minutes read

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த திஸா நாயக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுயள்ளது.

கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கொழும்பு – பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து மே மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துமிந்த திஸாநாயக்க, சுகயீனம் காரணமாக மே மாதம் 25ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மே மாதம் 28ஆம் திகதி மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.