சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 116 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக கூட்டணி 83 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2) நடைபெற்று வருகிறது. இதில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது.
இன்றைய ஓட்டு எண்ணிக்கையில் தற்போது திமுக கூட்டணி 116 இடங்களிலும், அதிமுக கூட்டணி 83 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தொடர்ந்து ஓட்டு எண்ணப்பட்டு வருகின்றன.