எல்லை மீறியது கொரோனா பாதிப்பு!!!!

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், கொரோனா அமெரிக்காவில் உச்சத்தை அடைந்த போதும் பொருளாதார ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை என்றும்  கொரோனா பாதிப்பில் மலைஉச்சிக்கு சென்றுவிட்டு தற்போது கீழே இறங்கி வருவதாக குறிப்பிட்டார்.

மே மாதம் முதல் அமெரிக்கா இயல்பான வர்த்தக நிலைக்கு திரும்ப முடியும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாக குறிப்பிட்ட டிரம்ப் , சவூதி மன்னருடன் எண்ணெய் உற்பத்தி விநியோகம் குறித்து பேச்சு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் அமெரிக்கா முக்கியமான முடிவுகளை எடுக்க இருப்பதாகவும், விமானப் போக்குவரத்துத்துறை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால் அதனை மீட்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்