செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் தீவிரமெடுக்கும் டெல்டா வைரஸ் பரவல்!

அமெரிக்காவில் தீவிரமெடுக்கும் டெல்டா வைரஸ் பரவல்!

1 minutes read

வாஷிங்டன்: அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் சிறுவர்களிடம் அதிவேகமாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அதிரடி திட்டங்கள் மூலம் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்த நிலையில் அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் தற்போது கொரோனா 4ம் அலையில் சிறார்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் இடையே தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தொற்றுநோய் தடுப்பு நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் தெரிவிப்பதாவது, ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். குறிப்பாக சிறார்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். டெல்டா வகை கிருமியால் அமெரிக்காவில் தற்போது 4வது அலை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. டெல்டா வகை வைரஸ் அதிதீவிரமாக பரவும் தன்மையுடையது.

தற்போது பாதிப்பு உள்ளாகி இருக்கும் சிறார்களின் 90% இந்த வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு வரும் தகவல்களும் அதனை உறுதி செய்கின்றன. எனவே பெரியவர்கள் மட்டுமல்ல சிரர்களிடமும் டெல்டா வகை வைரஸ் தொற்று அதிகம் காணப்படுகிறது என தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 1,02,356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடவில்லை என்றால் வேலை இல்லை என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.