செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அடுத்த 4 வாரங்களில் அமெரிக்காவில் கொரோனா பலி அதிகரிக்கும்!

அடுத்த 4 வாரங்களில் அமெரிக்காவில் கொரோனா பலி அதிகரிக்கும்!

2 minutes read

அமெரிக்காவில் அடுத்த 4 வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும், பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.

டெல்டா வைரஸ்
இந்தியாவில் முதன்முதலாக காணப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான டெல்டா வைரஸ் தொற்று, உலகின் 130 நாடுகளுக்கு மேலாக பரவி உள்ளது. இந்த டெல்டா வைரஸ், கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்த அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. அங்கு இந்த வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி உள்ளது. இது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆஸ்பத்திரி சேர்க்கை, இறப்பு
இந்த தருணத்தில் சி.டி.சி. என்று அழைக்கப்படுகிற அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-

  • செப்டம்பர் 6-ந்தேதி வாக்கில் தினசரி 9,600 முதல் 33 ஆயிரத்து 300 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படலாம்.
  • செப்டம்பர் 4-ந்தேதியுடன் முடியும் வாரத்தில் 3,300 முதல் 12 ஆயிரத்து 600 பேர் பலியாகக்கூடும்.
  • அமெரிக்காவின் தென்பகுதியில் இதுவரை இல்லாத வகையில் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை அதிகரிக்கும். வழக்கமான பராமரிப்பு கூட கிடைக்காத நிலைக்கு கொரோனா நோயாளிகள் ஆளாகலாம்.
  • டெல்டா வைரசால் பல மாகாணங்கள் போராடி வருகின்றன. இதுதான் கொரோனா வைரஸ்களிலேயே மிக அதிகமாக பரவக்கூடியதாகும். மற்ற கொரோனா வைரஸ்களை விட இது இரு மடங்கு வேகமாக தொற்றக்கூடியது.

பாதிப்பும் இறப்பும்
அமெரிக்காவில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தகவல்கள்படி, இதுவரையில் 3 கோடியே 61 லட்சத்து 85 ஆயிரத்து 761 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 லட்சத்து 18 ஆயிரத்து 454 பேர் இறந்துள்ளனர்.

அமெரிக்க மக்கள் தொகையில் 50.1 சதவீதத்தினர், கொரோனாவுக்கு எதிராக இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More