செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டைவிட்டு வெளியேறினார் சீன பாதுகாப்பு அமைச்சர்!

நாட்டைவிட்டு வெளியேறினார் சீன பாதுகாப்பு அமைச்சர்!

0 minutes read

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கின் இலங்கைக்கான பயணம் சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு இலங்கைக்கு வந்த அவர், சற்றுமுன்னர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு விஜயம் செய்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர், நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரமருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த அவர், குறித்த சந்திப்பின் ஊடாக இரு நாட்டிற்கும் இடையிலான தொடர்பு மேலும் வலுப்பெற்றதாக தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரையும் சந்தித்து அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

ஒக்டோபரில் சீனாவின் மூத்த இராஜதந்திரி யாங் ஜீச்சியின் விஜயத்தைத் தொடர்ந்து சீன அதிகாரி ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது உயர்மட்ட விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.