செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சிறந்த நடிகராக சூர்யா தேர்வு – கொண்டாடும் ரசிகர்கள்

சிறந்த நடிகராக சூர்யா தேர்வு – கொண்டாடும் ரசிகர்கள்

0 minutes read

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று‘. சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது.

இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யா சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறந்த படமாக சூரரைப்போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதைக் கொண்டாடி வருகின்றனர்.

சூரரைப்போற்று

மேலும் சிறந்த நடிகையாக தி பேமிலி மேன் வெப்தொடருக்காக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.