செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை!

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை!

0 minutes read

ஜம்மு- காஷ்மீரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினரினால் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா, டிரால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் படையினர் ஈடுப்பட்டபோது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகளை படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

குறித்த தீவிரவாதிகள், ஜெய்ஷ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.