செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குழந்தையின் வாயில் போட்டு குத்தும் மனித மிருகம் -சித்ரவதையால் கதறி துடிக்கும் குழந்தை!

குழந்தையின் வாயில் போட்டு குத்தும் மனித மிருகம் -சித்ரவதையால் கதறி துடிக்கும் குழந்தை!

1 minutes read

சென்னை: பச்சிளங் குழந்தையின் வாயில் போட்டு குத்தி சித்ரவதை செய்யும், பெண்ணின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைத்துள்ளது. வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் பச்சிளம் ஆண் குழந்தையை பெண் ஒருவர் சித்ரவதை செய்யும் காட்சிகள் வெளியாகி இருப்பது பார்த்தவர்கள் மனதை பதற வைப்பதாக உள்ளது. அந்த பெண் அவரது தாயா இல்லை பேயா என்று திட்டும் அளவுக்கு அவரது சித்தரவதை தொடர்கிறது. அந்த வீடியோவை அந்த பெண்ணே பதிவு செய்துள்ளார்.

அந்த ஆண் குழந்தைக்கு 2 அல்லது 3 வயதுதான் இருக்கும் என தெரிகிறது. படுக்கையில் வீடியோவை வைக்கும் அந்த பெண் சம்பந்தப்பட்ட ஆண் குழந்தையை தனது மடி அருகே படுக்க வைத்து குழந்தையின் கைகளை பின்னால் வைத்து முறுக்குகிறார். பின்னர், அந்த பெண் தனது கையால் குழந்தையின் வாயில் மாறி குத்துகிறார். அதில் குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி துடிக்கிறது. இன்னொரு வீடியோவில், குழந்தையின் காலில் உள்ள பெருவிரல் புண் புரையோடி காணப்படுகிறது.

அந்த புண்ணிலே தனது கையால் அந்த பெண் குத்துகிறார்; வலி தாங்க முடியாமல் அந்த பெண்ணின் கைகளை தடுக்க முடியாமல் கதறி துடிக்கிறது அந்த குழந்தை. 3வது வீடியோவில், மற்றொரு நாளில், குழந்தையின் முதுகு பகுதியை காட்டுகிறார். முதுகு பகுதி முழுவதும் பிரம்பால் அடித்த தடம். ரத்தம் பிதுங்கிய நிலையில் அந்த குழந்தை கதறுகிறது. அந்த குழந்தை கதறி துடிப்பதை அந்த பெண் ரசித்து பார்க்கிறார். அந்த பெண்ணின் மனதில் கொஞ்சம் கூட ஈரம் இல்லை என்பதையே அது காட்டுகிறது. இந்த வீடியோ முழுவதும் அந்த பெண் எடுத்தது தான். அந்த குழந்தை அவரது குழந்தையா அல்லது வேறு யாராவது குழந்தையா என்பது தெரியவில்லை. அந்த பெண்ணை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அந்த பெண் எடுத்த வீடியோ யாருக்கு அனுப்பினார் என்று தெரியவில்லை.

எப்படியோ இந்த சித்ரவதை சம்பவம் வீடியோக மூலம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது. எத்தனை நாள் அந்த பச்சிளங் குழந்தையை சித்ரவதை செய்தார் என்று தெரியவில்லை. இப்போது அந்த குழந்தை உயிருடன் இருக்கிறதா என்ற தகவலும் தெரியவில்லை. அந்த பெண்ணை பார்த்தால் தமிழ்நாட்டை சார்ந்த பெண் போன்று தான் உள்ளார். எனவே தமிழக போலீசார் இந்த வீடியோவில் உள்ள பெண்ணை உடனடியாக கண்டுபிடித்து அந்த குழந்தையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.