செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளது!

அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளது!

0 minutes read

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

வெல்லிங்டனில் உள்ள இராணுவ பணியாளர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், அண்டை நாடு தீவிரவாதத்தை தனது அரசு கொள்கையாக வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இருப்பினும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எதிரியை தோற்கடித்து தேசிய பாதுகாப்பை உறுதி படுத்த இந்திய படையினர் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இந்தியாவுக்கு ஒரு சவாலாக இருக்கும் என கூறியுள்ள அவர், அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த போர் குழுக்களை இராணுவத்தில் ஏற்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.