செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தமிழ் சினிமாவில் புதிய சாதனை -45 மணி நேரத்தில் 25 லட்சம் ஹிட்ஸ்- ஐ பட டீஸர்தமிழ் சினிமாவில் புதிய சாதனை -45 மணி நேரத்தில் 25 லட்சம் ஹிட்ஸ்- ஐ பட டீஸர்

தமிழ் சினிமாவில் புதிய சாதனை -45 மணி நேரத்தில் 25 லட்சம் ஹிட்ஸ்- ஐ பட டீஸர்தமிழ் சினிமாவில் புதிய சாதனை -45 மணி நேரத்தில் 25 லட்சம் ஹிட்ஸ்- ஐ பட டீஸர்

1 minutes read

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் டீஸர் அப்லோட் செய்யப்பட்டால், டிராபிக்கில் யு டியூப் திணறப்போகிறது என்று கணிக்கப்பட்டது. அந்த கணிப்பு தற்போது உண்மையாகி இருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற ஐ படத்தின் ஆடியோ விழாவைத் தொடர்ந்து அன்று இரவே ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. பல மாதங்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால், ஐ டீஸரைப் பார்க்க ரசிகர்கள் யு டியூப்பை நோக்கி திரண்டனர். ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த டீஸரை 2 மணி நேரத்திற்குள் சுமார் 10 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்தனர். இது தமிழ் சினிமாவில் புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக அஞ்சான் சாதனை காலி பண்ணிவிட்டது ஐ டீஸர். இப்போது இன்னொரு சாதனையைச் செய்திருக்கிறது ஐ படத்தின் டீஸர். அதாவது, ஐ படத்தின் டீஸரை 45 மணி நேரத்தில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இவ்வளவு குறுகிய நேரத்தில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதில்லை. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் முந்தைய பல ரெக்கார்டுகளை ஐ படத்தின் டீஸர் முறியடிக்கப்போவது உறுதி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.