செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சூப்பரான பீட்ரூட் பிரியாணி

சூப்பரான பீட்ரூட் பிரியாணி

1 minutes read

பீட்ரூட்டில் அல்வா, பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பீட்ரூட் வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – ஒன்று அரிசி – ஒரு கப்
கொத்தமல்லி இலை, புதினா இலை (சேர்த்து) – ஒரு கப்
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பட்டை – ஒரு இஞ்ச் நீளத் துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 3
நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை நன்றாகக் கழுவி வைக்கவும்.

பீட்ரூட்டை நறுக்கி தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து வைக்கவும்.

அரைத்த பீட்ரூட் உடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கப் வருமாறு கலந்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். இலைகள் வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

அதில் அரைத்து கலந்து வைத்திருக்கும் பீட்ரூட் தண்ணீரை ஊற்றி, கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான பீட்ரூட் பிரியாணியை லஞ்ச் பாக்ஸில் பேக் செய்து கொடுக்கவும்.

இந்தப் பிரியாணியின் கலர் வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்; சுவையும் பிரமாதமாக இருக்கும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.