செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்!

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்!

0 minutes read

நாட்டின் சில இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.

அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

அதற்கமைவாக இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு 03 மாதங்கள் முழுமையானவர்களுக்கே இவ்வாறு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்படவுள்ளது.

கடந்த காலங்களில் அதிகூடிய கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்களே முதல்கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.