1


மூட்டிய அடுப்பும் புகு புகு புகைச்சழும்
நனைந்த கைகளை காயவைத்த
புகையும்
கரி பிடித்த தேகத்தோடு தண்ணி கேத்தலும்
கறை பிடித்த சில்வர் கோப்பையுடன் சின்னஞ்சிறுசுகள்
கொட்டிய சோறும் கொத்திடும் கோழியும்
சிந்திய நீரும் ஊறிய
நிலமும்
ஒழுகிடும் கூரையும் ஒழுக்குகளை தாங்கிடும்
தண்ணீர் சட்டியும்
சுட சுட ரொட்டியும் பசியாறிட பழங்கறியும்
விரித்த பாய் ஊறும் வரை நிம்மதியான
உறக்கம்
கரைந்தொழுகும் மண்குடிசையும் வள்ளல் மனமும் யாரறிவார்