செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத்தும், அருண் விஜய்யும் சேர்ந்து ஆடிப்பாடும் குத்துப் பாடல் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத்தும், அருண் விஜய்யும் சேர்ந்து ஆடிப்பாடும் குத்துப் பாடல்

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத்தும், அருண் விஜய்யும் சேர்ந்து ஆடிப்பாடும் குத்துப் பாடல் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத்தும், அருண் விஜய்யும் சேர்ந்து ஆடிப்பாடும் குத்துப் பாடல்

0 minutes read

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், அருண் விஜய், தன்ஷிகா, விவேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். டான் மெகர்தூர் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் அஜீத்தும், அருண் விஜய்யும் சேர்ந்து ஆடிப்பாடும் குத்துப் பாடல் ஒன்றை விரைவில் படமாக்கவிருக்கிறார்களாம். இந்த பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் அழகாக மெட்டமைத்துள்ளாராம்.

தற்போது தீபாவளிக்காக படப்பிடிப்புக்கு சற்று இடைவெளி கொடுத்திருக்கும் படக்குழு, இந்த வார இறுதி நாட்களில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், இப்படத்திற்கு தலைப்பு தேர்வு செய்யும் பணியையும் படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். கூடிய விரைவில் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.