செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் முதன் முதலாக தியானம் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை

முதன் முதலாக தியானம் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை

1 minutes read

தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் மிக எளிதாக பழக முடியும். இதற்கு மூன்று நிமிடங்களிலிருந்து ஐந்து நிமிடங்களே ஆகும்.

தியானம்தியானம் மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும். தியானத்தால் விளையும் பயன்களை சொல்ல வார்த்தைகள் காணாது. அந்த அளவுக்கு பற்பல அற்புத பலன்களை உடையது.

தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் மிக எளிதாக பழக முடியும். இதற்கு மூன்று நிமிடங்களிலிருந்து ஐந்து நிமிடங்களே ஆகும். முதல் கட்ட தியான முறையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து படித்து உணர்ந்த பின் தியானத்திற்கு உங்களை தயார் செய்து கொள்வது சிறப்பாகும். நாம் வசிக்கின்ற வீட்டில் தியானம் பழகுவதற்கு நல்ல வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள்.

அமர்வதற்கு உடலுக்கு அச்சுறுத்தல் இல்லாதவாறு மெத்தை அல்லது போர்வையை மடித்து பயன்படுத்தலாம். தியானம் பழகும் இடத்தை அடிக்கடி மாற்ற கூடாது. அமர்வதற்கு பயன்படுத்தும் போர்வைகளையும் மாற்றுதல் கூடாது. முடிந்தால் மனதுக்கு பிடித்த வாசனையுள்ள பத்தியை கொளுத்தி வையுங்கள். காலை மாலை என எப்பொழுதும் தனிமையில் செய்யுங்கள். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பித்தால் மிகவும் நன்று.

தியானத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள். தியானத்தின் இடையில் தடைகள் ஏற்பட்டால் பிறர்மீது கோபம் கொள்ளாதீர்கள். தியானத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள். அதே போல் மகிழ்ச்சியாக முடியுங்கள். தியானம் பழக ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் தடங்கல்கள் நிறைய வந்து உங்களை ஈடுபடவிடாமல் தடுக்கும்.

அது இயற்கையின் விளையாட்டு. ஆதலால் மிகுந்த மன உறுதியுடன் பழகுங்கள். அப்படி ஒருவேளை இடையில் போக வேண்டி இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு தியானத்தை முடித்து விடுங்கள். காலையில் தியானம் செய்ய முடியாவிட்டால் மாலையில் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். எஜமானுக்கு விசுவாசத்தோடு இருக்கும் நாய் போல உங்கள் மனதோடு எப்போதும் விசுவாசத்தோடு இருங்கள்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.