செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐ.பி.எல்.: புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை வெளியிட்டது அணி நிர்வாகம்!

ஐ.பி.எல்.: புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை வெளியிட்டது அணி நிர்வாகம்!

1 minutes read

நடப்பு ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, லக்னோ அணிக்கு ‘லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றபோது புனே அணியை வாங்கியிருந்த சஞ்சீவ் கோயங்கா அதற்கு ரைஸிங் புனே சுப்பர் ஜெயன்ட் எனப் பெயர் சூட்டியிருந்தார்.

இந்நிலையில், தற்போது லக்னோ அணியை வாங்கியுள்ள கோயங்கா, இதற்கும் சுப்பர் ஜெயன்ட் என்றே பெயர் சூட்டியுள்ளார்.

லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், ஏலத்துக்கு முன்பாக லக்னோ அணி, மூன்று நட்சத்திர வீரர்களை வாங்கியது. இதில் கே.எல் ராகுலை 17 கோடி ரூபாய்க்கும் அவுஸ்ரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸை 9.2 கோடி ரூபாய்க்கும் இந்திய வீரரான ரவி பிஷ்னாய்யை 4 கோடி ரூபாய்க்கும் வாங்கியது.

ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரின் 15ஆவது தொடர், இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.