செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு பாகிஸ்தான் சுப்பர் லீக்: முல்தான் சுல்தான்ஸ் அணி சிறப்பான வெற்றி!

பாகிஸ்தான் சுப்பர் லீக்: முல்தான் சுல்தான்ஸ் அணி சிறப்பான வெற்றி!

1 minutes read

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கராச்சி மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணியும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மசூத் 88 ஓட்டங்களையும் டிம் டாவிட் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஹஸ்னெய்ன் 2 விக்கெட்டுகளையும் போக்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 168 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், முல்தான் சுல்தான்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஒட்டங்களாக, பென் டக்கெட் 47 ஓட்டங்களையும் இப்தீகார் அஹமட் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

முல்தான் சுல்தான்ஸ் அணியின் பந்துவீச்சில், குஸ்தீல் ஷா, டேவிட் வில்லி மற்றும் இம்ரான் தஹீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 58 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 88 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மசூத் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.