செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு தொழில்சார் பெண்கள் கால்பந்தாட்ட அணியை உருவாக்க முன்வந்துள்ள கலம்போ எவ்சி

தொழில்சார் பெண்கள் கால்பந்தாட்ட அணியை உருவாக்க முன்வந்துள்ள கலம்போ எவ்சி

1 minutes read

நவீன யுகத்தில் வர்த்தகம், தொழில் மற்றும் விளையாட்டுத்துறையில் பெண்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு மிக சொற்ப வாய்ப்புகளே வழங்கப்படுகின்றது.

மேலும் வாழ்க்கையை வளமுள்ளதாக, செழிப்புள்ளதாக ஆக்குவதில் மிக சொற்ப பெண்களே சரியான தொழிலை தேர்வு செய்கின்றனர்.

விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு சந்தர்ப்பமோ ஆதரவோ வழங்குப்படுவதும் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.

இத்தகைய சூழ்நிலையில் விளையாட்டுத் துறையில் பெண்களை ஊக்குவித்து தொழில்சார் பெண்கள் கால்பந்தாட்ட அணியை உருவாக்க கலம்போ எவ்சி முன்வந்துள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் உயர் நிலையை அடைந்துள்ள முதல்தர கால்பந்தாட்டக் கழகம் ஒன்று தொழில்சார் பெண்கள் கால்பந்தாட்ட அணியை உருவாக்க முன்வந்திருப்பது இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

கால்பந்தாட்டத்தில் திறமைவாய்ந்த பெண்கள் இருப்பதுடன் அவர்களுக்கு சிறந்த வழிநடத்தலுடனும் ஆலோசனைகளுடன் முறையான பயிற்சிகளை வழங்கினால் உலக அரங்கில் சிறந்த பெறுபேறுகளை ஈட்டமுடியும் என கலம்போ எவ்சி நம்புகின்றது.

எனவே இலங்கை பெண்களை தொழில்சார் கால்பந்தாட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களை உலக அரங்கில் உயரிய நிலைக்கு இட்டுச் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முழுமையான ஈடுபாட்டுடன் செயற்பட கலம்போ எவ்சி  முகாமைத்துவம் முன்வந்துள்ளது.

இதனை நிதர்சனமாக்கும் வகையில் இலங்கையில் முதலாவது தொழில்சார் பெண்கள் அணியை, ‘புதிய வாய்ப்பு, புதிய ஆரம்பம், தொழில் பயணம்’ என்ற கருப் பொருளில் கலம்போ எவ்சி ஆரம்பிக்கவுள்ளது.

இதனை முன்னிட்டு 16 வயதுடைய மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கான பகிரங்க தேர்வு ஒன்றை கொம்பனித் தெரு, சிட்டி லீக் மைதானத்தில் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி (வியாழக்கிழமை) பிற்பகல் 2.00 மணியிலிருந்து கலம்போ எவ்சி நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.