செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இரண்டாவது போட்டியிலும் மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

இரண்டாவது போட்டியிலும் மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

1 minutes read

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Image

போட்டியில் சூர்யகுமார் யாதவ்வின் 64 ஓட்டங்கள் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் நான்கு விக்கெட்டுகள் என்பன இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

இரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நேற்று ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ஓட்டங்களை எடுத்தது. 

சூர்யகுமார் யாதவ் 64 ஓட்டங்களையும் கே.எல்.ராகுல் 49 ஓட்டங்களையும், வாஷிங்டன் சுந்தர் 24 ஓட்டங்களையும், தீபக் ஹூடா 29 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

238 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியத்தீவுகள் அணி களமிறங்கியது.  

இந்திய பந்துவீச்சாலர்களின் அசத்தலான பந்து வீச்சினால் மேற்கிந்தியத்தீவுகளின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன.

Image

இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 46 ஓவரில் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 

மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் ஷமார் புரூக்ஸ் 44 ஓட்டங்களையும், அகேல் ஹொசைன் 34 ஓட்டங்களையும், ஷாய் ஹோப் 27 ஓட்டங்களையும், ஒடியன் ஸ்மித் 24 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்தியா சார்பில் பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Image

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.