செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஆப்கான் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி சிறப்பான வெற்றி!

ஆப்கான் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி சிறப்பான வெற்றி!

1 minutes read

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

சட்டோகிராம் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 49.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நஜிபுல்லா 67 ஓட்டங்களையும் ரஹமத் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், முஷ்டபிசுர் 3 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட், சகிப் அல் ஹசன் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹமதுல்லா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 216 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, 48.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அபீப் ஹொசைன் ஆட்டமிழக்காது 93 ஓட்டங்களையும் மெயிடி ஹசன் ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஃபசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்டுகளையும் முஜிப் உர் ரஹ்மான் மற்றும் ராஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களையும் சிறப்பான பந்து வீச்சையும் வெளிப்படுத்திய மெயிடி ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.