செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: முதல் நாளில் தென்னாபிரிக்கா நிதான துடுப்பாட்டம்!

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: முதல் நாளில் தென்னாபிரிக்கா நிதான துடுப்பாட்டம்!

1 minutes read

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், டெம்பா பவுமா 22 ஓட்டங்களுடனும் வெண்டர் டுஸன் 13 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கான அணி, இன்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது டீன் எல்கர் 41 ஓட்டங்களுடனும், சரேல் எர்வீ 108 ஓட்டங்களுடனும், எய்டன் மார்கிரம் 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ, மெட் ஹென்ரி மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை தென்னாபிரிக்கா அணி, நாளை தொடரவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.