செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் புதியதொரு வீடு நாடகத்தின் முதல் காட்சி லண்டன் முத்தமிழ் விழாவில்

புதியதொரு வீடு நாடகத்தின் முதல் காட்சி லண்டன் முத்தமிழ் விழாவில்

1 minutes read

மகாகவியின் ” புதியதொரு வீடு” நாடகம் என் அரங்கவியல் பயணத்தின் திருப்பு முனை என்று சொல்வேன்.

எடுத்துரைஞர் முதல் மாயன் வரை ஒரு தொடர் பயணம்.

1978 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சி.மெளனகுருவின் நெறியாள்கையில் ‘புதியதொரு வீடு’ நாடகத்தில் எடுத்துரைஞராக அரங்கில். அது ஒரு புதிய அனுபவம்.

என் அரங்கியல் பயணத்தில் என்னோடு தொடர்கின்ற நாடகம் புதியதொரு வீடு.குறிப்பாக புதியதொரு வீடு நாடகத்தின் பாடல்களை உலகின் பல மேடைகளிலும் வானொலி தொலைக்காட்சிகளிலும் பாடியிருக்கிறேன்.அந்த இசை என்னுள் செரித்துக் கிடக்கிறது.

ஆசிரியராக கடமையாற்றிய காலங்களில் மாணவர்களைக் கொண்டு அரங்கிட்டிருக்கிறேன்.

1995 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மெளனகுரு அவர்களது நெறியாள்கையில் புதியதொரு விடு நாடகத்தின் பிரதான பாத்திரங்களில் ஒன்றான ‘மாசிலன்’ பாத்திரத்தை ஏற்று நடித்தேன்.அன்று மாயனாக நடித்த கிருபாகரனும்,மறைக்காடராக நடித்த பத்மரஞ்சனும் இன்றில்லை காலம் அவர்களை கரைத்து விட்டது.

2022 லண்டன் முத்தமிழ் விழாவில் புதியதொரு வீடு நாடகத்தின் முதல் காட்சி என் நெறிப்படுத்தலில் நானும் லண்டன் சற்பரி தமிழ்ப் பள்ளி மாணவர்களுடனும் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களும் இணைய மாயனாக நான்.

அரங்கில் நடிகனாக நிற்கிற போது ஏற்படும் மகிழ்வை விபரிக்க வார்த்தையில்லை.

பாலசுகுமார்

ஒளிப் படங்கள்: பபா லக்ஷி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.