செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகளவில் வேலை செய்ய சிறந்த இடங்களின் பட்டியலில் கூகுள் முதலிடம்: டுவிட்டருக்கு இடமில்லைஉலகளவில் வேலை செய்ய சிறந்த இடங்களின் பட்டியலில் கூகுள் முதலிடம்: டுவிட்டருக்கு இடமில்லை

உலகளவில் வேலை செய்ய சிறந்த இடங்களின் பட்டியலில் கூகுள் முதலிடம்: டுவிட்டருக்கு இடமில்லைஉலகளவில் வேலை செய்ய சிறந்த இடங்களின் பட்டியலில் கூகுள் முதலிடம்: டுவிட்டருக்கு இடமில்லை

1 minutes read

அமெரிக்காவில் இயங்கும் கிளாஸ்டோர் வலைத்தளம் கடந்த ஆறு வருடங்களாக உலக அளவில் வேலை செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களாக 50 நிறுவனங்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்டியலை கிளாஸ்டோரின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் ஹோமேன் இன்று வெளியிட்டார்.

இதில் கூகுள் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. போஸ்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான பெயின்&கம்பெனி இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, இரண்டாவது இடத்தில் இருந்த ட்விட்டர் இந்த வருடம் 50 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில் இடம் பெறவில்லை.

சென்ற வருடம் ஐந்தாவது இடத்தில் இருந்த பேஸ்புக் நிறுவனம், 13-வது இடத்திற்கும், சென்ற வருடம் மூன்றாம் இடத்தில் இருந்த வணிக சமூக வலைதளமான லிங்க்டுஇன் 23-வது இடத்திற்கும் வந்துள்ளது

ஊழியர்களின் வேலை மற்றும் குடும்ப பொறுப்புகள் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தியதால் கூகுள் முதல் இடத்தில் இருக்கிறது என்று கிளாஸ்டோர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.