செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சுந்தர் சி நடிக்கும் ‘வல்லான்’ பட டீசர் வெளியீடு

சுந்தர் சி நடிக்கும் ‘வல்லான்’ பட டீசர் வெளியீடு

1 minutes read

இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி நடிப்பில் தயாராகி வரும் ‘வல்லான்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘கட்டப்பாவ காணோம்’ படத்தை இயக்கிய இயக்குநர் மணி சேயோன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வல்லான்’. இதில் சுந்தர் சி கதையின் நாயகனாக நடிக்கிறார். 

நடிகைகள் ஹெபா பட்டேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘நேர்கொண்ட பார்வை’ பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாச்சலம், கமல் காமராஜ், ஜெயக்குமார், அஜித் கோஷி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

Sundar C to produce 'Mayabazar' remake in Tamil!

மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். 

வி ஆர் டெல்லா பிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் வி. ஆர். மணிகண்டன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஹாரர் வித் கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் டீசரில், ‘கண்ண கட்டி ஆடுற கண்ணாமூச்சி ஆட்டத்த விட.. மனுஷங்க கண்ண தொறந்துகிட்டே இருக்கும்போது ஆடுற கண்ணாமூச்சி ஆட்டம்…ப்ச். ப்ச்.. ரொம்ப சுவராசியமா இருக்கும்..” என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்திருப்பதால், இணையத்தில் எதிர்பார்த்ததைவிட கூடுதலான ஆதரவு ‘வல்லான்’ டீசருக்கு கிடைத்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.