Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகி தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ் 2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகி தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ்

2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகி தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ் 2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகி தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ்

1 minutes read

லண்டனில் நேற்று 121 நாடுகள் பங்கேற்ற, 64 வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 22 வயதான, தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ் தட்டிச் சென்றார்.

நேற்று நடந்த இறுதி அலங்கார அணிவகுப்பில் உலக அழகிக்கான மகுடம் அவருக்கு சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் 100 கோடி பேர் தொலைக்காட்சியில் கண்டு களித்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பட்டம் அறிவிக்கப்பட்டதும் ஆச்சர்யம் அடைந்த ஸ்ட்ராஸ் கைகளைத் தட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ”மிஸ் வேர்ல்டு” என்ற எழுத்துக்கள் கொண்ட ரிப்பனை, கடந்த வருடம் உலக அழகி பட்டம் வென்ற பிலிப்பைன்ஸ் நாட்டு உலக அழகி மேகன் யங் அணிவித்தார்.

பட்டம் பெற்ற ஸ்ட்ராஸ் “தென் ஆப்பிரிக்காவே இது உனக்காக” என்று கூறினார். இந்தப் புகழ், தனக்கு மிகப்பெரிய பொறுப்பு என அவர் தெரிவித்தார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More