பாக் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அரசு சார்பில்இழப்பீடு தொகை வழங்கப்படும் என பாக்., அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் நுழைந்து 126-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரதமர் நவாஸ்ஷெரீப்.மேலும் பலியான குழந்தைகளின் சார்பில் அவர்களின் பெற்றோர்களுக்கு 5 லட்ச ரூபாயும், காயமடைந்த மாணவர்களுக்கு 2 லட்சரூபாயும் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.