உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்திருப்பது புதிய தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது.
சீனி போன்ற முக்கிய வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை கடந்த ஒரு வாரத்தில் 14 வீதம் வரை அதிகரித்திருப்பது உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்தது தொடக்கம் அந்நாட்டின் ருபிள் நாணம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ரஷ்ய நாணயத்தின் பெறுமதி இந்த ஆண்டு 22 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
மார்ச் 18 ஆம் திகதி முடிவுற்ற வாரத்தில் ஆண்டு பணவீக்கம் 14.5 வீதம் உயர்ந்திருப்பதாக ரஷ்ய பொருளாதார அமைச்சு புதன்கிழமை குறிப்பிட்டது. இது 2015 பிற்பகுதி தொடக்கம் உச்ச எண்ணிக்கையாக உள்ளது.
உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடும் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.