போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா.,வின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு, இலங்கையை, ஐ.நா., பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இதுகுறித்து, அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டெபானே டுஜாரக் கூறியதாவது:இலங்கையில், போருக்கு பிந்தைய செயல் திட்டங்களை விரிவாக மேற்கொள்ள, அந்நாட்டு அரசுக்கு ஐ.நா., பொதுச் செயலர் ஒத்துழைப்பு தந்து வருகிறார்.மேலும், மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு, இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையத்தின் கோரிக்கையையும் அவர், ராஜபக்ேஷ அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த, 2009ம் ஆண்டு, விடுதலைப் புலிகள் உடனான இறுதிப் போரில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க ராஜபக் ஷே மறுத்து வருகிறார்.இந்நிலையில், ‘ராணுவத்தினரின் போர்க் குற்றம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவேன்’ என, ராஜபக்ேஷ அறிவித்துள்ளார்.
28வது ஆண்டு கூட்டம் :*ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின், 28வது ஆண்டுக் கூட்டம், வரும் 2015ம் ஆண்டு, மார்ச் 2 முதல் 27 வரை ஜெனீவாவில் நடைபெற உள்ளது.
*இதில், இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பான, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.