செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சூப்பரான ஸ்நாக்ஸ் பன்னீர் பாப்கார்ன்

சூப்பரான ஸ்நாக்ஸ் பன்னீர் பாப்கார்ன்

1 minutes read

பன்னீரை வைத்து சூப்பரான பாப்கார்ன் செய்யலாம். இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 100 கிராம்
மைதா/ கடலைமாவு/ அரிசிமாவு – ¼ கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – ¾ தேக்கரண்டி
கரம் மசாலா – ¾ தேக்கரண்டி
மிளகு தூள் – ½ தேக்கரண்டி
ரொட்டித் தூள் – ½ கப்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

பன்னீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ரொட்டித் தூள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா அல்லது நீங்கள் விரும்பிய மாவைக் கொட்டி, அதில் மிளகாய்த் தூள், உப்பு, மிளகு தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு அதில் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாக கலக்கவும். அந்தக் கலவையில் வெட்டி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து கிளறவும். பன்னீரில் மசாலா நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். பிறகு பன்னீரை ரொட்டித்தூளில் போட்டு பிரட்டவும்.

இதை 15 நிமிடங்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பன்னீரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான பன்னீர் பாப்கார்ன் ரெடி.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.