நீர்: தண்ணீர் உடலுக்கு நீரூட்டும். தண்ணீர் குடித்தால் பசி குறையும், மெடபாலிசம் அதிகரிக்கும்.
தேங்காய்எண்ணெய்: கொழுப்பை குறைக்கவும், மெடபாலிசம் அதிகரிக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும்.
கிரான்பெர்ரிஜூஸ்: நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கலோரிகளை குறைக்க கிரான்பெர்ரி ஜூஸ் உதவும்.
யோகர்ட், தேன்: புரதச்சத்து அதிகம் உள்ள யோகர்ட், மெடபாலிசம் அதிகரிக்க உதவும்.
கேரட்ஜூஸ்: ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ள கேரட் ஜூஸில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்கும் பித்தநீர் சுரக்க கேரட் ஜூஸ் உதவுகிறது.
ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சைஜூஸ்: ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை ஆகிய சிட்ரஸ் பழங்களில் கலோரிகள் குறைவாக உள்ளன. மேலும், இவற்றில் வைட்டமின் C மற்றும் B அதிகம் உள்ளது.
கிரீன்டீ: உடல் எடையை குறைத்து பெடபாலிசம் அதிகரிக்க கிரீன் டீ உதவும்.
ஆப்பிள்சைடர்வினிகர்: ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அளவுகளை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் உதவும்.
புரதச்சத்துமிகுந்தஉணவு: உணவில் புரதச்சத்து அதிகம் சேர்த்துக்கொண்டால் மெடபாலிசம் அதிகரிப்பதோடு, தசைகள்வலுவாகி, உடல் எடை குறைய உதவும்.
பாக்கெட்உணவுகள்வேண்டாம்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் சர்க்கரை, கொழுப்புச்சத்து, உப்பு, கலோரிகள் அதிகம் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின், மினரல் சத்துக்கள் குறைவாக உள்ளன.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW