செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘பயணிகள் கவனிக்கவும்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘பயணிகள் கவனிக்கவும்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

1 minutes read

நடிகர் விதார்த் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற புதிய திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதனை யொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.இயக்குனர் எஸ் பிசக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.

 இதில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாகவும், நடிகை லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி கதையின் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். 

இவர்களுடன் கருணாகரன், பிரேம், கௌரிகிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை அஜித் பிதோமஸ் எழுதியிருக்க, ஒளிப்பதிவை பாண்டி குமார் கவனிக்க, ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். 

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜயராக வேந்திரா தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோரின் ஓவிய பாணியிலான தோற்றம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதையும், ரயில், தண்டவாளம், விளையாட்டுமை தானம் ஆகியவை பின்னணியாக இடம் பெற்றிருப்பதாலும், இப்படத்தின் தலைப்பு புகையிரத நிலையத்தில் ஒலிக்கும் பயணிகள் கவனிக்கவும் என்று இருப்பதாலும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.