3
இலங்கையின் 7-வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பாரதூரமான வன்முறைகளோ பெரிய அசம்பாவிதங்களோ இன்றி முடிவடைந்துள்ளது.
பல மாவட்டங்களில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இம்முறை வாக்குப்பதிவு உச்ச அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.