முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி. பிரகாஷ், தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் ஒன்று வீரா- ரெஜினா நடித்துவரும் ‘ராஜதந்திரம்’. இப்படத்தை ஏ.ஜி. அமித் இயக்கி வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசரை வித்தியாசமான முறையில் பிரபலங்களை வைத்து டுவிட்டரில் வெளியிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்திற்காக ஒரு புரமோ பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியதோடு மட்டுமல்லாமல் தன் மனைவி சைந்தவியுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.
இந்தப் பாடலில் ரியல் லைப் ஜோடியான ஜி.வி. பிரகாஷ்- சைந்தவியும், ரீல் லைப் ஜோடியான வீரா- ரெஜினா ஆகியோரை வைத்து பிரபல விளம்பர பட இயக்குனர் அவினாஷ் ஹரிஹர சென்னையில் படமாக்கியுள்ளார்.
சன் லாண்ட் சினிமாஸ் மற்றும் ஒயிட் பக்கேட் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட உள்ளனர்.