“கனடா வாழவைப்போம்” அமைப்பின் நிதி உதவியுடன் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரிக்கான “உயிரிழை” அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் செயற்பாட்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வு கடந்த 10.01.2015 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அன்னை இல்லத்தில் இடம்பெற்றுள்ளது
உயிரிழை அமைப்பின் தலைவர் ஏ.ஜெயக்காந்தன் தலமையில் இடம்பெற்ற இன்நிகழ்விற்கு பாரளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடபிராந்திய குடும்ப புனர்வாழ்வு இணைப்பாளர்; பிரேம்குமார் மற்றும் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் பென்னம்பலநாதன் ஆகியோர் கலந்து கொண்ட இன்நிகழ்வில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது இன்நிகழ்வில் பயனாளிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

