புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம குறைப்பும் போராட்டமும்

அரச ஊழியர்களின் சம்பளம குறைப்பும் போராட்டமும்

0 minutes read

அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகளைக் குறைத்து திறைசேரி வௌியிட்டுள்ள ஆலோசனையினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய, அடிப்படை சம்பளத்தை மீறாத வகையில், கொடுப்பனவுகளை செலுத்துமாறு வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனையை எதிர்த்து இன்று வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று முற்பகல் 8 மணி தொடக்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

தான்தோன்றித்தனமான கொடுப்பனவை மீளப்பெறுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தினர்.

அரச அச்சகத்தின் உத்தியோகத்தர்கள் பொரளையில் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.