செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முற்றுகைப் போராட்டம் | நேபாளத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள்முற்றுகைப் போராட்டம் | நேபாளத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள்

முற்றுகைப் போராட்டம் | நேபாளத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள்முற்றுகைப் போராட்டம் | நேபாளத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள்

0 minutes read

நேபாளத்தில் கருத்தொற்றுமை அடிப்படையில் அரசியல் சாசனத்தை உருவாக்க வலியுறுத்தி எதிர்க் கட்சி உறுப்பினர்கள், வியாழக்கிழமை இரவு, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சிக்கு மாறிய நேபாளத்தில், புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குமாறு ஐ.நா. சபை அறிவுறுத்தி இருந்தது. இதனை உருவாக்க, அந்த நாட்டின் ஆளுங்கட்சியினரும், எதிர்க் கட்சியினரும், நீண்டகாலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை.

இந்த நிலையில், அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான காலக்கெடு வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இதுவரை அரசியல் சாசனத்தை உருவாக்காததற்கு கண்டனம் தெரிவித்து, நேபாளத்தின் பிரதான எதிர்க் கட்சியான, ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் 19 கூட்டணிக் கட்சிகளும், வியாழக்கிழமை நள்ளிரவு நேபாள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.