செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சாய் பல்லவி மீது காவல் துறையில் புகார்

சாய் பல்லவி மீது காவல் துறையில் புகார்

1 minutes read

சாய் பல்லவி நடித்துள்ள விராட பர்வம் படத்தின் புரொமோஷன் நேர்காணலின் போது பேசியது சர்ச்சைக்குள்ளாகியது.
காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்ததும், இஸ்லாமியர்களுக்கு நடப்பதும் ஒன்றுதான் என்று சாய் பல்லவி தெரிவித்திருந்தார்.
நடிகை சாய் பல்லவி, நடிகர் ராணா நடித்துள்ள விராட பர்வம் திரைப்படம் ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் நக்சல் தலைவர் என்ற கேரக்டரில் ராணா நடித்துள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் புரொமோஷனுக்காக நடைபெற்ற நேர்காணலின்போது பேசிய நடிகை சாய்பல்லவி, “எனது குடும்பத்தினர் எந்த கொள்கையையும் சாராதவர்கள். நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்றுதான் எனது குடும்பத்தினரால் நான் வளர்க்கப்பட்டுள்ளேன். யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்க வேண்டும். இடது சாரிகள், வலது சாரிகள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை நம்மால் சொல்ல முடியாது.

காஷ்மீர் பண்டிட்டுகள் அனுபவித்த கொடுமைகளை தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் கூறியிருந்தார்கள். மத அடிப்படையில் இந்த சம்பவங்களை நீங்கள் அணுகினால், சமீபத்தில் பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய டிரைவர் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல வேண்டும் என்று கூறி தாக்கினார்கள். காஷ்மீர் பண்டிட் பிரச்னை, இஸ்லாமிய டிரைவர் மீதான தாக்குதல் இவ்விரு சம்பவங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்க முடியும்? நாம் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் பிறரை காயப்படுத்த மாட்டோம்.

இதையும் படியுங்கள்: நடிகர் திலீப்புக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்
நான் மிகவும் நடுநிலையானவள். எனவே நான் நம்புவது என்னவென்றால், நீங்கள் என்னை விட வலிமையானவராக இருந்தால், நீங்கள் என்னை ஒடுக்குகிறீர்கள் என்றால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஒரு சிறிய கூட்டத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒடுக்குவது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சாய் பல்லவி மீது ஹைதராபாத் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ இந்து ரிஷத் இயக்கத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்ற நபர் ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல்நிலையத்தில் சாய் பல்லவி மீது புகார் கொடுத்துள்ளார். பசு பாதுகாவலர்களையும், காஷ்மீரி தீவிரவாதிகளையும் சாய் பல்லவி ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை வேண்டும் என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

‘விரத பர்வம்’ படத்தின் இயக்குனர் வேணு உடுகுலா மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.