செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ‘பன்னி குட்டி’

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ‘பன்னி குட்டி’

1 minutes read

நகைச்சுவை நடிகர்களும், குணசித்திர நடிகர்களுமான கருணாகரன் மற்றும் யோகி பாபு கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘பன்னி குட்டி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

‘கிருமி’ எனும் திரைப்படத்தையும், ‘சுழல்’ எனும் வலைதள தொடரையும் இயக்கிய இயக்குநர் அனுசரண் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பன்னி குட்டி’.

இதில் கருணாகரன் மற்றும் யோகி பாபு கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம் புலி, தங்கதுரை, ராமர், நடிகை லட்சுமி பிரியா, சாதிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பட்டிமன்ற பேச்சாளரும், இலக்கியவாதியுமான திண்டுக்கல் ஐ. லியோனி ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சதீஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்திருக்கிறார்.

கிராமிய பின்னணியில் நகைச்சுவையை மையப்படுத்திய இந்தப் படத்தை சூப்பர் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் சமீர் பரத்ராம் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கு பற்றி இயக்குநர் அனுசரண் பேசுகையில், ” கிருமி படத்திற்கு பிறகு கிடைத்த இடைவெளியில் வாழ்க்கை பற்றிய யதார்த்தமான புரிதல் ஏற்பட்டது.

அதிலிருந்து எம்மை மீட்டெடுக்க நகைச்சுவையுடன் கூடிய நம்பிக்கை பிரதானமாக இருந்தது. வாய்ப்பின்மையால் விரக்தியில் இருந்தபோது நம்பிக்கை மட்டுமே நம்மை காப்பாற்றும் ஆயுதம் என்பதை உணர்ந்து, அதனையே கருவாக்கி, முழு நீள நகைச்சுவை திரைக்கதையை ‘பன்னி குட்டி’ எனும் பெயரில் நண்பர் ரவி முருகையா உடன் இணைந்து உருவாக்கினேன்.

பன்னியை வைத்து படம் எடுத்தபோது எதிர்பாராத வகையில் பல அனுபவங்கள் கிடைத்தது. இந்தப் படம் பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும். அதனால் ‘பன்னி குட்டி’ படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

யோகி பாபு ,கருணாகரன் மற்றும் தற்போது முன்னணியில் இருக்கும் ஏராளமான நகைச்சுவை நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் ‘பன்னி குட்டி’ படத்தை லைகா நிறுவனம் வெளியிடுவதாலும், ஜூலை எட்டாம் திகதியன்று பட மாளிகையில் வெளியாவதாலும், இதற்கு ரசிகர்களிடத்திலும், திரை உலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.