செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ பட முன்னோட்டம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ பட முன்னோட்டம்

1 minutes read

‘கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி’ நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘வத்திக்குச்சி’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, நடிகை ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ட்ராவல் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 18 ரீல்ஸ் எண்டர்டெயின்மென்ட் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இரண்டு நிமிடம் கால அவகாசத்தில் உருவாகி இருக்கும் இந்த டிரைவர் ஜமுனா படத்தின் முன்னோட்டத்தில், ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருப்பதால் இந்த திரைப்படமும் வசூல் ரீதியான வெற்றியை பெறும் என திரையுலக வணிகர்கள் உறுதியுடன் தெரிவிக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.