செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீன கப்பல் விஜயம் பாரிய இராஜதந்திர சர்ச்சையாக மாறாது | ஹரீன் பெர்ணாண்டோ

சீன கப்பல் விஜயம் பாரிய இராஜதந்திர சர்ச்சையாக மாறாது | ஹரீன் பெர்ணாண்டோ

1 minutes read

சீனா கப்பலின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா நிலைமையை புரிந்துகொண்டுள்ளதால் கப்பல் விஜயம் பாரிய இராஜதந்திர சர்ச்சையை ஏற்படுத்தாது என இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோ அஹமதாபாத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துiறையை ஊக்குவிப்பதற்காக அஹமதாபாத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சீனா இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொண்டுள்ளது கடந்த காலங்களில் இலங்கையின் தேவைகளை புரிந்துகொண்டுள்;ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு சிறிய நாடு இலங்கை அனைவருடனும் சிறந்த உறவை பேணுகின்றது இந்தியா இதனை புரிந்துகொள்ளும் என நான் நிச்சயமாக கருதுகின்றேன் இந்தியாவுடன் எங்களிற்கு சிறந்த இராஜதந்திர உறவுகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தொடர்ச்சியாக தொடர்பில் உள்ளனர் இந்தியா எங்கள் நிலைமையை புரிந்துகொள்கின்றது என நான் கருதுகின்றேன் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கையில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது கடந்த காலங்களில் அவர்கள் எங்கள் தேவைகளை புரிந்துகொண்டுள்ளனர் ஆகவே இதனை பாரிய இராஜதந்திர விவகாரமாக கருதவேண்டியதில்லை என நான் நினைக்கின்றேன் என ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.